வரும் 30ந் தேதி இந்தியாவில் ரிலீசாகும் புதிய பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி!

By Saravana

இளைய சமுதாயத்தினர் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டியிருக்கும் மாடல் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ காம்பேக்ட் சொகுசு எஸ்யூவியின் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் தேதி உறுதியாகியுள்ளது.

வரும் 30ந் தேதி இந்த புதிய மாடலை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்திருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய எஸ்யூவி மாடல் அப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Benz SUV

இந்த நிலையில், சிஎல்ஏ45 ஏஎம்ஜி காம்பேக்ட் செடான் காருக்கு அடுத்ததாக ஜிஎல்ஏ சொகுசு காம்பேக்ட் எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் களமிறக்குகிறது. இந்த புதிய மாடல் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

சர்வதேச அளவில் 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுடனும், 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் இருவித ட்யூனிங்கிலும் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் எஞ்சின் ஆப்ஷன்கள் குறித்த தகவல் இல்லை.

ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சத்திற்கு இடையிலான விலையில் இந்த புதிய சொகுசு காம்பேக்ட் எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 6, 2014, 7:31 [IST]
English summary
Mercedes-Benz had earlier this announced it will be launching an array of products in the Indian market. The German luxury car manufacturer had promised new products in new segments. Now they will be launching their compact SUV in India on 30th of September, 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+