விரைவில் விற்பனைக்கு வரும் புதிய பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி
இந்த ஆண்டு பல புதிய மாடல்களை வரிசைக் கட்டி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அடுத்ததாக தனது புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலான ஜிஎல்ஏ.,வை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய காம்பேக்ட் சொகுசு எஸ்யூவி மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்காக, பல கோடீஸ்வர வாடிக்கையாளர்களும், தொழிலதிபர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சர்வதேச மார்க்கெட்டில் இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் மாடல்களில் உள்ளது. 156 எச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் மற்றும் 211 எச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இதேபோன்று, 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 136 எச்பி பவர் கொண்டதாகவும், மற்றொன்று 170 எச்பி பவர் கொண்டதாகவும் இருவித ட்யூனிங்கில் கிடைக்கும்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் மாடலில் வந்தாலும், அனைத்து எஞ்சின் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வருமா என்பது சந்தேகம். ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








