இந்தியாவில் 2வது கார் ஆலையை திறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!
இந்தியாவில் 2வது கார் ஆலையை விரைவில் திறக்க இருக்கிறது ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ்.
மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் உள்ள சகனில் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு முதல் இந்த ஆலையில் கார் அசெம்பிள் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த கார் ஆலையில் ஆண்டுக்கு 10,000 கார்களை அசெம்பிள் செய்யும் கட்டமைப்பு வசதிகள் கொண்டது. இந்த நிலையில், எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு இந்தியாவில் மற்றொரு புதிய கார் ஆலையை அமைத்து வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ்.
இந்த புதிய ஆலையின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், கார் உற்பத்தியை துவங்குவதற்கான அரசு அனுமதி பெறும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆலையும் ஆண்டுக்கு 10,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த இரு ஆலைகள் மூலம் ஆண்டுக்கு 20,000 கார்களை உற்பத்தி செய்யும் வசதியை மெர்சிடிஸ் பெற இருக்கிறது. மேலும், புதிய கார் மாடல்களை இந்த புதிய ஆலையில் அசெம்பிள் செய்யவும் மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








