பண்டிகை கால கொண்டாட்டத்திற்கான சிறப்பு பரிசுத் திட்டம்: பென்ஸ் அறிவிப்பு
போட்டி அதிகமாகிவிட்டதால் சொகுசு கார் நிறுவனங்களும் இப்போது வாடிக்கையாளர்களை கவர்வதற்கான பரிசுத் திட்டங்களை கையிலெடுத்துள்ளன.
பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் 'லக்ஸ்ஃபெஸ்ட்' என்ற புதிய திட்டத்தை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் காணலாம்.

பரிசுத் திட்டம்
இந்த திட்டத்திற்காக நாடு முழுவதும் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஷோரூம்களில் லக்ஸ்ஃபெஸ்ட் திட்டத்தின் கீழ் பல கவர்ச்சிகர பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

பென்ஸ் கஃபே
குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, கஃபே ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஷோரூம்களுக்கு வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு இசை ஆல்பமும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வழங்கப்பட உள்ளது.

ஆடம்பர கைக்கடிகாரம்
இந்த திட்டத்தின் முத்தாய்ப்பான விஷயமாக குலுக்கல் பரிசு திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒன்றாக வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு கார்ல் எஃப் பச்ரெர் கைக்கடிகாரம் வெல்லும் வாய்ப்புள்ளது.

மேரியாட் அனுபவம்
இரண்டாவதாக, ஜேடபிள்யூ மேரியாட் ஓட்டலில் தங்குவதற்கான பேக்கேஜை வெல்லும் வாய்ப்பையும் பெறலாம்.

விமான டிக்கெட்
மூன்றாவது பரிசாக சுவிஸ் ஏர் விமானத்தில் தம்பதி ஒருவருக்கான பயணச் சீட்டு போன்ற பரிசுகளை வெல்லும் வாய்ப்புள்ளது.

திட்ட காலம்
இன்று முதல் வரும் அக்டோபர் 31ந் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும்.

டெஸ்ட் டிரைவ்
மேலும், லக்ஸ்ஃபெஸ்ட் திட்டத்தின் கீழ் டெஸ்ட் டிரைவ் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கூப்பன் மூலம் ஜேடபிள்யூ மேரியாட்டில் தங்குவதற்கான கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடியையும் பெறலாம்.

குலுக்கல் விபரம்
இந்த பரிசுத் திட்டத்திற்கான குலுக்கல் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








