பெங்களூர் கம்ப்யூட்டர் கண்காட்சியில் காட்சி தந்த புதிய பென்ஸ் சி கிளாஸ்!
பெங்களூரில் இன்று துவங்கிய சிஇபிஐடி கம்ப்யூட்டர் கண்காட்சியில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் டிசைன் சாயலை தாங்கி வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரை ஆட்டோமொபைல் துறையினர் பேபி எஸ் கிளாஸ் காராக வர்ணித்து வருகின்றனர்.

அனைத்து விதங்களிலும் மேம்படுத்தப்பட்டு வரும் இந்த புதிய சி கிளாஸ் கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இந்திய வாடிக்கையாளர்களுக்கு காட்சிக்கு விட்டுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.
தள்ளுபடி விலையில் கார் கேர் கிட்!
இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ., எபர்ஹார்டு கெர்ன் குறிப்பிடுகையில்," மெர்சிடிஸ் பென்ஸிடமிருந்து கவர்ச்சியான டிசைன், உயர்தரம், சிறந்த செயல்திறன் கொண்ட மாடல்களை எங்களது வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், எங்களது காரில் சிறப்பான தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்க வேண்டும என்றும் கருதுகின்றனர்.
எனவே, முன்மாதிரியான கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் புதிய சி கிளாஸ் கார் மாடலை அறிமுகப்படுத்துகிறோம். அடுத்த தலைமுறை தொழில்நுட்ப வசதிகளை தரும் தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் எங்களது சி கிளாஸ் காரை இந்த கம்ப்யூட்டர் கண்காட்சியின் மூலம் இந்திய வாடிக்கையார்களுக்கு அறிமுகம் செய்வதில் பொருத்தமாக இருக்கும்," என்று கூறினார்.

இன்று துவங்கிய சிஇபிஐடி கம்ப்யூட்டர் கண்காட்சி நாளை மறுதினம் நிறைவு பெறுகிறது. இந்தநிலையில், 25ந் தேதி இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அப்போது விலை உள்ளிட்ட முக்கிய விபரங்கள் வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications








