இந்த ஆண்டு 8 புதிய கார் மாடல்களை இறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்
இந்த ஆண்டு 8 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. கடந்த ஆண்டு கார் விற்பனையில் 32 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது பென்ஸ்.

இதேபோன்று, இந்த ஆண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில், கடந்த ஆண்டை போலவே, பல புதிய கார் மாடல்களை இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வருகிறது பென்ஸ். இதனை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா தலைவர் எபர்ஹார்டு கெர்ன் கூறியுள்ளார்.
பென்ஸ் தெரிவித்துள்ள மாடல்களில் ஜிஎல்கே எஸ்யூவி மிக முக்கியமான மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காம்பெக்ட் சொகுசு எஸ்யூவி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








