கார் பற்றிய தகவல்களை கையிலேயே தரும் பென்ஸ் 'கைக்கடிகாரம்'!
கார் பற்றிய பல முக்கிய தகவல்களையும், போக்குவரத்து குறித்த தகவல்களையும் அளிக்கும் எளிதாக தெரிந்து கொள்வதற்கான கைக்கடிகாரம் போன்று கையில் கட்டிக் கொள்வதற்கான புதிய மின்னணு சாதனத்தை பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
பென்ஸ் நிறுவனத்தின் டிரைவ்ஸ்டைல் என்ற ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அடிப்படையிலேயே இந்த புதிய சாதனமும் செயல்படும். இந்த புதிய சாதனத்தினால் கிடைக்கும் அனுகூலங்களை பற்றிய தகவல்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

பெபிள் தயாரிப்பு
பென்ஸ் நிறுவனத்தின் டிரைவ்ஸ்டைல் அப்ளிகேஷன் மூலம் இந்த வசதிகளை தற்போது ஸ்மார்ட்போன் மூலம் கார் உரிமையாளர்கள் பெற முடியும். அதைவிட வசதியாக தகவல்களை பெறும் விதத்தில் இந்த சாதனத்தை அமெரிக்காவை சேர்ந்த பெபிள் நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது.

வசதிகள்
காரை விட்டு அலுவலகம் அல்லது சற்று தூரம் தள்ளி வந்துவிட்ட பின்னர் கார் கதவுகள் மூடியிருக்கின்றனவா அல்லது காரில் எவ்வளவு எரிபொருள் இருக்கிறது என்பன போன்ற தகவல்களை இருந்த இடத்திலிருந்தே கைக்கடிகாரம் போன்ற இந்த சாதனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நேவிகேஷன்
சாலையில் போக்குவரத்து நெரிசல் பற்றியும் மற்றும் இதர இடர்பாடுகள் குறித்தும் இந்த சாதனம் முன்கூட்டியே தெரிவிக்கும். கார் இருக்கும் இடத்தையும் இந்த சாதனத்தின் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். மாற்று வழியில் விரைவாக செல்வதற்கான வழித்தடத்தை கூட இது கூறிவிடும்.

ரிமோட் கன்ட்ரோல்
இந்த சாதனத்தை பொழுதுபோக்கு சாதனங்களை இயக்குவதற்கான ரிமோட் கன்ட்ரோல் போன்றும் பயன்படுத்த முடியும்.

வசதி
ஸ்மார்ட்போன் மூலம் மேற்கண்ட பல வசதிகளை கார் உரிமையாளர்கள் பெற முடியும். இருந்தாலும், சில சமயங்களில் ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியாத நிலையில், இந்த கையில் கட்டியிருக்கும் சாதனத்தின் மூலம் மிக எளிதாக தகவல்களை பெற முடியும்.


Click it and Unblock the Notifications








