பென்ஸ் ஜிஎல்ஏ கிராஸ்ஓவர், எஸ் கிளாஸ் டீசல் கார்களுக்கு முன்பதிவு ஆரம்பம்!
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கிராஸ்ஓவர் காருக்கும், எஸ் கிளாஸ் சொகுசு காரின் டீசல் மாடலுக்கும் இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. வரும் பண்டிகை காலத்தில் ஜிஎல்ஏ கிளாஸ் விற்பனைக்கு வர இருக்கிறது.
பென்ஸ் ஜிஎல்ஏ கிராஸ்ஓவர் ஸ்டைல் காருக்கு ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். இதேபோன்று, பென்ஸ் எஸ் கிளாஸ் சொகுசு காரின் டீசல் மாடலுக்கு ரூ.5 லட்சம் முன்பணம் பெற்றுக் கொண்டு முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கிராஸ்ஓவர் டிசைன்
ஏ கிளாஸ் காரின் அடிப்படையிலான கிராஸ்ஓவர் மாடலாக உருவாக்கப்பட்டதுதான் ஜிஎல்ஏ கிளாஸ். எஸ்யூவி போன்று ஸ்டைலுக்காக ஸ்கிட் பிளேட்டுகள் போன்ற பல கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

வேரியண்ட்
இந்தியாவில் ஜிஎல்ஏ 220சிடிஐ என்ற டீசல் வேரியண்ட்டில் மட்டும் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த காரின் டெலிவிரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்
167 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

எஸ் கிளாஸ் டீசல்
ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் பென்ஸ் எஸ் கிளாஸ் பெட்ரோல் மாடலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விரைவில் எஸ் கிளாஸ் டீசல் மாடல் வருகிறது. அடுத்த மாதம் பிற்பகுதியிலோ அல்லது வரும் ஜூலை மாதம் எஸ் கிளாஸ் டீசல் காரின் டெலிவிரி இந்தியாவில் துவங்குகிறது.

எஞ்சின்
இந்தியா வரும் எஸ் கிளாஸ் காரின் எஸ் 350சிடிஐ மாடலில் 282 பிஎச்பி ஆற்றலையும், 490 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

எதிர்பார்க்கும் விலை
ரூ.1.25 கோடி விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் புனே அருகே சகனில் உள்ள பென்ஸ் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








