அனைத்து சாலைகளிலும் செல்வதற்கான ஓர் ஆடம்பர மோட்டார் இல்லம்!

By Saravana

சொகுசு மோட்டார் இல்லங்கள் குறித்து அவ்வப்போது பல செய்திகளை படித்து வியந்திருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வசதிகளிலும், வடிவமைப்பிலும் நம்மை அசத்துவதாக இருக்கின்றன.

இதையும் தாண்டி எந்தவொரு சாலையிலும் செல்வதற்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட 2 ஆல் டெர்ரெய்ன் மோட்டார் இல்லங்களை மங்கோலிய தொழிலதிபர் வாங்கி வைத்துள்ளார்.

பென்ஸ் ஸெட்ரோஸ் 6 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டிரக்குகள்தான் இவ்வாறு சொகுசு மோட்டார் இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த சொகுசு மோட்டார் இல்லங்களில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ராணுவ பயன்பாடு

ராணுவ பயன்பாடு

ராணுவம் மற்றும் தீயணைப்புத் துறைகளில் மீட்புப் பணிகளில் இந்த பென்ஸ் ஸெட்ரோஸ் டிரக் பயன்படுத்தப்படுகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த டிரக்கில் 1300 என்எம் டார்க்கையும் அளிக்கும் 6 சிலிண்டர்கள் கொண்ட 7.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எஞ்சின் சக்தி 6 சக்கரங்களுக்கும் செல்கிறது.

குவாட் பைக்

குவாட் பைக்

எந்தவொரு சாலைகளிலும் செல்லும் அம்சங்கள் கொண்ட இந்த மோட்டார் இல்லத்தின் வலதுபுறத்தில் குவாட் பைக்கை வைத்து எடுத்துச் செல்வதற்கான இடவசதி உள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

குளியலறை, சமையலறை, படுக்கையறைகள் உள்ளன. சீதோஷ்ண நிலையை பொறுத்து இயக்கும் வசதி கொண்ட ஏசி மற்றும் ஹீட்டர் உண்டு. இரண்டு பெரிய எல்சிடி டிவி திரைகள், செயற்கைகோள் தகவல் தொடர்பு, போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் இருக்கின்றன.

மின்சாரம்

மின்சாரம்

இந்த மோட்டார் இல்லத்தில் டீசல் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. தவிர, சூரியசக்தி மின்சாரத்தை பெறும் அமைப்பும் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 3, 2014, 11:12 [IST]
English summary
What's even better than a luxurious mobile home? One that's built on a all-terrain conquering Mercedes-Benz Zetros 6x6 truck. As outrageous as it may sound when you have the money nothing's impossible.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+