அடுத்த மாதம் இந்தியாவில் ரிலீசாகும் புதிய பென்ஸ் எஸ்யூவி

By Saravana

அடுத்த மாதம் 15ந் தேதி புதிய பென்ஸ் ஜிஎல்63 ஏஎம்ஜி சொகுசு எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் பல கூடுதல் வசதிகளுடன் இந்த புதிய எஸ்யூவி வருகிறது. இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் எண்ணற்ற வசதிகள் மற்றும் இதர அம்சங்களை ஸ்லைடரில் படங்களுடன் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஜிஎல்63 ஏஎம்ஜி மாடலில் 565 பிஎஸ் பவரையும், 760 என்எம் டார்க்கையும் அளிக்கும் 5.5 லிட்டர் வி8 பை டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனுடன் 7 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைந்து செயல்புரியும்.

செயல்திறன்

செயல்திறன்

இந்த எஸ்யூவி 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவிக்கிறது.

டிசைன்

டிசைன்

வெளிப்புறம் எந்தளவிற்கு ஸ்போர்ட்டியாக இருக்கிறதோ, அதே அளவிற்கு உட்புறமும் மிகச்சிறப்பாக இருக்கிறது. ஏஎம்ஜி ஸ்டீயரிங் வீல், லெதர் இருக்கைகள் உள்பட ஏராளமான பிரிமியம் அம்சங்களுடன் இந்த எஸ்யூவி தனது ஆடம்பரத்திற்கான சாட்சிகளாக பெற்றிருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், சிரியஸ் சேட்டிலைட் ரேடியோ, பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், நேவிகேஷன் சிஸ்டம் என எண்ணற்ற வசதிகள் உள்ளன.

சிறப்பு அம்சங்கள்

சிறப்பு அம்சங்கள்

ஆட்டோமேட்டிக் லெவல் கன்ட்ரோல், ஏர்மேட்டிக் ஏர்ஸ்பிரிங்க்ஸ், அடாப்டிவ் டேம்பிங் சிஸ்டம், ஆக்டிவ் கர்வ் சிஸ்டம் போன்றவை எந்தவொரு சாலையிலும் சொகுசான பயணத்திற்கு உத்தரவாதம் கொடுக்கின்றன.

விலை

விலை

ஒரு கோடி விலையில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 27, 2014, 16:39 [IST]
English summary
Mercedes-Benz India will be launching their new SUV the GL63 AMG in India on the 15th of April. It will receive a host of new and interesting upgrades from the earlier generation model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+