மெர்சிடிஸ்- மேபக் பிராண்டில் புத்தம் புதிய சொகுசு கார் அறிமுகம்!

By Saravana

மெர்சிடிஸ்- ஏஎம்ஜி பிராண்டை தொடர்ந்து மெர்சிடிஸ் - மேபக் பிராண்டில் புதிய சொகுசு காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் கொண்ட மாடலாக இந்த புதிய சொகுசு கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோஷோ மற்றும் சீனாவின் குவாங்சூ ஆட்டோஷோ என இரு இடங்களிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.

கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வீல்பேஸ் அதிகம்

வீல்பேஸ் அதிகம்

பென்ஸ் எஸ் கிளாஸ் காரைவிட மெர்சிடிஸ் - மேபக் எஸ் 600 காரின் வீல்பேஸ் 200 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இது லிமோசின் ரகத்திலான மாடலாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன் மிகச்சிறந்த சொகுசு வசதிகளை பயணிகளுக்கும், ஓட்டுனருக்கும் வழங்கும்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இரண்டு வித எஞ்சின் ஆப்ஷன்களில் இந்த புதிய மாடல் வெளியிடப்பட்டுள்ளது. முதலாவது எஸ்- 500 மாடலில் 448.59 எச்பி பவரையும், 700என்எம் டார்க்கையும் வெளிப்படுத்த வல்ல 4.6 லிட்டர் வி8 எஞ்சின் கொண்டது. இந்த மாடலில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டாவது எஞ்சின் ஆப்ஷன் கொண்ட மாடலில் 533.53எச்பி பவரையும், 830என்எம் டார்க்கையும் வழங்கும் 6.0லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

நிசப்தமான கேபின்

நிசப்தமான கேபின்

இதுவரை தயாரிக்கப்பட்ட மாடல்களில் கேபின் சப்தம் மிக குறைவான மாடலாக இதனை மெர்சிடிஸ் பென்ஸ் குறிப்பிடுகிறது. பின்புறத்தில் பயணிகளுக்கு தனித்தனி இருக்கைகள் இருக்கும்.

விற்பனை?

விற்பனை?

வரும் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு செல்கிறது. இதைத்தொடர்ந்து, சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 22, 2014, 12:26 [IST]
English summary
Mercedes-Maybach had earlier this week announced that it would be launching an all new S-Class. They have globally unveiled the stretched out S-Class at Los Angeles Auto Show any Guangzhou Auto Show. The unveil was held in China and United States almost simultaneously.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+