மதுரையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் திறப்பு!

By Saravana

மதுரையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய கார் ஷோரூமை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எபர்ஹார்டு கெர்ன் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 4வது கார் ஷோரூம் இதுவாகும். மதுரை, தெற்கு வெளி வீதியில் 10,000 சதுர அடி பரப்பில் இந்த கார் ஷோரூம் அமைக்கப்பட்டிருக்கிறது. சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த புதிய பென்ஸ் கார் ஷோரூமை அமைத்திருக்கிறது.

Benz Car Showroom

இந்த புதிய கார் ஷோரூமில் 5 கார்களை காட்சிக்கு வைக்க முடியும். இதுதவிர, வாடிக்கையாளர்களுக்கான ஓய்வு அறை, கார் ஆக்சஸெரீகளை வாடிக்கையாளர்கள் பார்வையிடுவதற்கான பகுதி, கஃபே போன்றவற்றுடன் இந்த கார் ஷோரூம் அமைக்கப்பட்டிருக்கிறது.

வர்த்தக விரிவாக்கத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் 14 புதிய கார் ஷோரூம்களை திறந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் விதத்தில் தற்போது இரண்டாம் நிலை நகரங்களிலும் புதிய ஷோரூம்களை திறந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 20, 2014, 11:00 [IST]
English summary

 German car maker Mercedes-Benz in India has inaugurated the firm’s new car showroom in Madurai. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+