புல்லட் புரூஃப் எஸ்யூவியை காட்சி வைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புல்லட் புரூஃப் எஸ்யூவி மாடல் உள்பட 4 முக்கிய கார் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்லட் புரூஃப் எஸ்யூவி மாடலின் அம்சங்கள் மற்றும் இதர மாடல்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எம் கார்டு எஸ்யூவி

எம் கார்டு எஸ்யூவி

எம் கார்டு என்ற பெயரிலான புல்லட் புரூஃப் வசதி கொண்ட எம் கிளாஸ் எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் பார்வைக்கு வைக்கிறது. இந்த எஸ்யூவி 2009ம் ஆண்டின் விஆர்4 பாதுகாப்பு அம்சங்களுக்கு உட்பட்டதாக இருக்கும்.

 புல்லட் புரூஃப் வசதி

புல்லட் புரூஃப் வசதி

எம் கார்டு எஸ்யூவியின் கண்ணாடிகள் குண்டு துளைக்காத விசேஷ பாதுகாப்பு கொண்டது. தவிர, கண்ணாடிகள் உடைந்து சிதறாத வகையிலான விசேஷ பூச்சு கொண்டது. சொகுசையும், பாதுகாப்பையும் ஒருங்கே வழங்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த எம் கார்டு எஸ்யூவியில் 258 எச்பி ஆற்றலை அளிக்கும் 3.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. தவிர, 408 எச்பி ஆற்றலை அளிக்கும் 4.6 லிட்டர் வி8 எஞ்சின் மாடலிலும் கிடைக்கிறது.

ஃபார்முலா-1 கார்

ஃபார்முலா-1 கார்

மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெட்ரோனாஸ் அணியின் ஃபார்முலா- 1 காரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியர்களுக்கு காட்சி தர இருக்கிறது.

 காம்பெக்ட் எஸ்யூவி

காம்பெக்ட் எஸ்யூவி

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் புதிய ஜிஎல்ஏ காம்பெக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக பென்ஸ் தெரிவித்துள்ளது.

 சிஎல்ஏ45 ஏஎம்ஜி

சிஎல்ஏ45 ஏஎம்ஜி

பென்ஸ் அரங்கை அலங்கரிக்கப்போகும் கார் மாடல்களில் சிஎல்ஏ45 ஏஎம்ஜி செடானும் ஒன்று. இதுவும் கார் பிரியர்களுக்கு கவரும் மாடலாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 23, 2014, 11:46 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+