புலிக்கு பிறந்தது பூனையாகுமா? - கார் ரேஸில் கலக்கும் மைக்கேல் சூமாக்கரின் மகன்!

By Saravana

முன்னாள் ஃபார்முலா- 1 கார் பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கரின் மகன் மைக் சூமாக்கர் தனது தந்தை வழியில் கார் பந்தயங்களில் கலக்கி வருகிறார். பிரான்சில் சமீபத்தில் நடந்து முடிந்த எஃப்ஐஏ அமைப்பு நடத்திய கோ கார்ட் கார் பந்தயத்தின் ஜூனியர் பிரிவில், 15 வயது நிரம்பிய மைக் இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மைக், இந்த பந்தயத்தில் இரண்டாம் பிடித்தது மிக முக்கியமானதாக கருதுகிறேன். ஃபார்முலா-1 கார் பந்தய சாம்பியன் பட்டத்தை வெல்வதே எனது லட்சியம். அதில் மிக தெளிவாக இருக்கிறேன். அதேவேளை, எனது கார் பந்தய வாழ்க்கையின் துவக்கம்தான் இது என்று கூறினார்.

Mick Jr

ஃபார்முலா-1 பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மைக்கேல் சூமாக்கரின் மகன் கார் பந்தயங்களில் கலக்கி வருவது சூமாக்கரின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பனிச்சறுக்கு விளையாட்டின்போது தலையில் பலத்த காயமடைந்து 6 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் சூமாக்கர் தற்போது வீடு திரும்பியுள்ளார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தந்தை வழியில் சாதிக்கத் துடிக்கும் ஜூனியர் சூமாக்கருக்கு வாழ்த்துகள்!!

More from DriveSpark

Article Published On: Thursday, September 25, 2014, 9:38 [IST]
English summary
Michael Schumacher's 15-year-old son Mick wants to follow in his father's famous footsteps and be a Formula One world champion after being crowned World Karting Vice-Champion.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+