பஞ்சருக்கு குட்பை... மிச்செலின் 'ஏர்லெஸ்' டயர் அறிமுகம்!

By Saravana

கடந்த ஆண்டு போலரிஸ் நிறுவனம் டயர் இல்லாமல் செல்லும் வகையிலான புதிய சக்கரத்துடன் ஏடிவி வாகனத்தை அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிச்செலின் நிறுவனம் தற்போது ஏர்லெஸ் டயரை அறிமுகம் செய்துள்ளது.

பல்வேறு விதங்களிலும் பயன்தரக்கூடிய இந்த புதிய வகை டயர் வர்த்தக ரீதியில் உற்பத்திக்கு செல்ல இருப்பதும் கூடுதல் மகிழ்ச்சிகரமான செய்தி. ட்வீல் என்று பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய வகை டயர் குறித்த கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.


சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ஏர்லெஸ் டயர்

ஏர்லெஸ் டயர்

இதில், ட்யூப் பொருத்துவதற்கு பதிலாக வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட ஸ்போக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை பாலியூரித்தேனால் ஆன ஸ்போக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிர்வுகள் மற்றும் பாரத்தை தாங்குவது போன்ற காற்றடைத்த ட்யூப் செய்யும் பணிகளை இந்த பாலியூரித்தேன் ஸ்போக்ஸ் செய்யும்.

பராமரிப்பு குறைவு

பராமரிப்பு குறைவு

இந்த புதிய ட்வீல் டயருக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. வாரந்தோறும் காற்றுப் பரிசோதனை அவசியமில்லை என்பதுடன், பஞ்சர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சோதனை

சோதனை

பலகட்ட சோதனைகளில் இந்த டயர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக மிச்செலின் தெரிவித்துள்ளது. இவை நீடித்த உழைப்பை வழங்குவதோடு, பராமரிப்பு தொல்லையிலிருந்து விடுபட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக பயன்பாடு

வணிக பயன்பாடு

இந்த புதிய மிச்செலின் ட்வீல் டயர் வணிக ரீதியில் விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காக, வட அமெரிக்காவில் உள்ள தனது ஆலையை ட்வீல் டயர் தயாரிப்புக்காக அர்ப்பணிக்க உள்ளது மிச்செலின் நிறுவனம்.

ஜான் - டியர் நிறுவனத்துக்கு சப்ளை

ஜான் - டியர் நிறுவனத்துக்கு சப்ளை

முதலாவதாக ஜான் டியர் நிறுவனத்தின் புல் அறுக்கும் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட உள்ளது. இதைத்தொடர்ந்து, கார்களிலும் இந்த வகை டயர்கள் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 25, 2014, 12:31 [IST]
English summary
Michelin has opened its newest plant in North America, which will produce the innovative MICHELIN X TWEEL Airless Radial Tire for commercial applications. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+