சாகச பயணங்களுக்கான பிரத்யேக கார் மாடலை வெளியிட்ட மினி!

By Saravana

மினி கார் தயாரிப்பு நிறுவனம் தனது உயர் ரக கார்களின் கஸ்டமைஸ் மாடலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. தற்போது சிறிய மாறுதலுக்காக ஒரு சாகச பயணத்துக்கான புதிய கார் மாடலை வெளியிட்டிருக்கிறது.

மினி பேஸ்மேன் கார் அடிப்படையிலான இந்த புதிய மாடல் பிக்கப் டிரக் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த புதிய மினி பிராண்டின் பிக்கப் டிரக்கின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

பிஎம்டபிள்யூவின் பயிற்சி டிசைனர்கள் மற்றும் வடிவமைப்பு நிபுணர்களின் எண்ணத்தில் இந்த புதிய மினி பிக்கப் டிரக் உருவாக்கப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 184 எச்பி ஆற்றலையும், 260 என்எம் டார்க்கையும் அள்ளித் தரும் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த காரில் ஆஃப் ரோடு டயர்கள் உள்ளன. ஆறுகளை கடப்பதற்காக ஸ்நோர்கெல் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் சேஸீயிலும் சில மாறுதல்களை செய்துள்ளதோடு, கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 இடவசதி

இடவசதி

இரண்டு பேர் செல்வதற்கான இருக்கை வசதி உள்ளது. கேபினுக்கு மேலே கேரியர் பொருத்தப்பட்டு, அதில் ஸ்டெப்னி டயர் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பின்புறம் உள்ள பாரம் ஏற்றுவதற்கான பகுதியில் கூடுதல் பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

கான்செப்ட மாடல்

கான்செப்ட மாடல்

இது கான்செப்ட் மாடலாகவே வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வது குறித்து தற்போதைக்கு மினி நிறுவனத்திடம் எந்த திட்டமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, April 26, 2014, 14:29 [IST]
English summary
The pickup vehicle is called Mini Paceman Adventure. It is based on the structure of a Paceman by the company. The Paceman Adventure was jointly created by BMW's young apprentices and their mentors.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+