மினி பிராண்டின் 5வது புதிய தலைமுறை கார் மாடல் எது?

By Saravana

மொத்தம் 5 புதிய தலைமுறை மாடல்களை மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்ய மினி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மூனிச் நகரில் நடந்த மோட்டார் ஷோவில் இதனை மினி கார் நிறுவனத்தின் தலைவர் பீட்டர் சுவாசென்பர் தெரிவித்தார்.

புதிய தலைமுறை மினி 3 டோர் மற்றும் 5 டோர் கார் மாடல்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவிலும் இந்த இரு மாடல்களும் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு மூன்றாவது மாடலாக புதிய மினி கன்ட்ரிமேன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Mini Car

அடுத்து, 4வது மாடலாக சாஃப்ட் டாப் கொண்ட கன்வெர்ட்டிபிள் மாடல் அறிமுகமாகவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், ஐந்தாவது மாடல் குறித்துதான் சந்தேகம் நிலவுகிறது. அது எந்த மாடல் என்பது குறித்து இதுவரை உறுதியாக தெரியவில்லை. அதேவேளை, ஹைபிரிட் மாடல் தயாரிப்பில் மினி கார் நிறுவனம் ஈடுபட்டுள்ளதை பீட்டர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹைபிரிட் மாடலை அறிமுகப்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் தெரிவித்தார். எனவே, அந்த 5வது மாடல் ஹைபிரிட் மாடலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், புதிய தலைமுறை வரிசையில் மொத்தம் 5 மாடல்களை மட்டுமே அறிமுகம் செய்ய மினி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 29, 2014, 9:02 [IST]
English summary

 Mini has recently revealed that their modern generation model line up will be restricted to only five models. This news came into light during a show at Munich.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+