இந்தியாவில் மிராஜ், அட்ராஜ் கார்களை களமிறக்கும் மிட்சுபிஷி!
இந்தியாவில் புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஜப்பானிய நிறுவனமான மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியை மட்டும் தற்போது மிட்சுபிஷி விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டுடன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் முடிகிறது. அதற்கு பின்னர் இந்தியாவில் தனது வர்த்தகத்தை ஸ்திரம் செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை மிட்சுபிஷி தீவிரமாக களமிறங்கியுள்ளது.

புதிய மாடல்கள்
டீலர்ஷிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருக்கும் மிட்சுபிஷி, புதிய ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி மாடல்களை வரும் ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அந்த கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய எஸ்யூவி
அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருப்பதாக மிட்சுபிஷி தெரிவித்துள்ளது. ஆனால், எந்த மாடல் என்பது குறித்த விபரத்தை தெரிவிக்கவில்லை. ஆனால், புதிய ஹேட்ச்பேக் மற்றும் செடான் மாடல்களின் விபரங்களை தெரிவித்துள்ளது.

மிராஜ்
பிற ஆசிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிராஜ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மிட்சுபிஷி. வரும் 2016ம் ஆண்டில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்
மிராஜ் ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலுடன் வரும். பின்னர், வரவேற்பை பொறுத்து டீசல் மாடலை அறிமுகம் செய்ய மிட்சுபிஷி திட்டமிட்டிருக்கிறது. மாருதி ஸ்விஃப்ட் காருக்கு நேரடி போட்டியான சிறப்பம்சங்கள் மற்றும் விலை போன்றவற்றுடன் நிலைநிறுத்தப்படும்.

அட்ராஜ் செடான்
நிசான் சன்னி, டொயோட்டா எட்டியோஸ் ஆகிய செடான் கார்களுக்கு போட்டியாக வர இருக்கிறது. இந்த வகை கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், அட்ராஜ் செடானுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று மிட்சுபிஷி கருதுகிறது.

எஞ்சின்
மிராஜ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் டீசல் மாடல்களை அறிமுகம் செய்ய மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடல்கள் மூலம் இந்திய மார்க்கெட்டில் ஸ்திரமான வர்த்தகத்தை பெற முடியும் என்று நம்புகிறது.


Click it and Unblock the Notifications








