ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் வருகிறது மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்!
ஜப்பானிய கார் நிறுவனமான மிட்சுபிஷி தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஒரே மாடல் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி. இந்த எஸ்யூவி மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி.,யை விரும்புவர்களுக்கு சிறப்பான தேர்வாக இருக்கும்.

டெலிவிரி
ஆகஸ்ட்டில் விலை விபரம் அறிவிக்கப்படுவதுடன் முன்பதிவும் துவங்கப்பட்டுவிடும். செப்டம்பர் முதல் இந்த புதிய ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலின் டெலிவிரி துவங்கப்பட உள்ளது.

எஞ்சின்
தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 2000 முதல் 2,500 ஆர்பிஎம்.,மில் அதிகபட்சமாக இந்த எஞ்சின் 178 எச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கிறது.

ஆட்டோமேட்டிக் மாடல்
ஆட்டோமேட்டிக் மாடலிலும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். தற்போதுள்ள 2.5 லிட்டர் டீசல் எஞ்சினுடனேயே வருகிறது. ஆட்டோமேட்டிக் மாடலில் கூடுதல் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்கும்.

விலை வித்தியாசம்
தற்போது மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி ரூ.24.15 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. இதைவிட ரூ.1 லட்சம் கூடுதல் விலையில் புதிய பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி வர இருக்கிறது.

போட்டியாளர்கள்
டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், செவர்லே கேப்டிவா ஆகிய பிரிமியம் எஸ்யூவிகளின் ஆட்டோமேட்டிக் மாடலுடன் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் போட்டிபோடும்.


Click it and Unblock the Notifications








