ஆன்லைனில் கலக்குவதில் நம்பர்-1 கார் தயாரிப்பாளர் யார்... சடார்னு மாருதின்னு சொல்லப்படாது?!

By Saravana

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போ காரணமாக நம் நாட்டு ஆன்லைன் உலகை ஆட்டோமொபைல் துறையின் கையில் இருந்தது என்று சொல்லலாம். அதிலும் சில கார் மாடல்களும், கார் தயாரிப்பு நிறுவனங்களும் ஆன்லைனில் அதிகமாகவே ஆதிக்கம் செலுத்தின.

பிளாக்ஒர்க்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆன்லைனில் கலக்கிய கார் மாடல்கள் மற்றும் நிறுவனங்களை பட்டியலிட்டு வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம், ஆன்லைனில் தங்களது பலம் என்ன என்பதை போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு கொள்வதற்கு கார் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்துவிட்டது. ஆன்லைனில் கலக்கிய கார் நிறுவனங்கள் பற்றிய செய்தித் தொகுப்பை காணலாம்.

நம்பர்- 1?

நம்பர்- 1?

ஆன்லைன் வாசிகளால் அதிகம் குறிப்பிடப்பட்ட பிராண்டு டொயோட்டா. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது டொயோட்டா அறிவித்த சில ஆன்லைன் விளம்பர பிரச்சாரங்கள் மூலம் நம்பர் ஒன் இடத்தை எளிதாக பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஃபோர்டு, மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் இடம்பிடித்துள்ளன.

 ஜொலித்த கார் நிறுவனம்

ஜொலித்த கார் நிறுவனம்

பிஎம்டபிள்யூ 3 ஜிடி கார் மூலம் அதிகம் ஜொலித்த சொகுசு கார் நிறுவனங்கள் பட்டியலில் பிஎம்டபிள்யூ முதலிடம் பெற்றது. அடுத்ததாக எஃப் டைப் கூபே கார் மூலம் ஜாகுவாரும், எஸ் கிளாஸ் மற்றும் ஜிஎல்ஏ கார்கள் மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்களும் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெனோ கான்செப்ட்டுக்கு அங்கீகாரம்

ரெனோ கான்செப்ட்டுக்கு அங்கீகாரம்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரெனோ காட்சிக்கு வைத்திருந்த KWID கான்செப்ட் காருக்கு ஆன்லைனில் அதிக அளவில் நேர்மறை கருத்துகளை வந்தன. அதேவேளை, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்தன. அதாவது, அந்த கார் அதிக விலை கொண்டதாக குறிப்பிட்டு எதிர்மறை கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

எஸ்யூவி வகை

எஸ்யூவி வகை

எஸ்யூவி வகை கார்களில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ முதலிடம் பிடித்தது. புதிய ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி, 2014 ஸ்கோடா யெட்டி, டாடா நெக்ஸன் கான்செப்ட், செவர்லே அத்ரா கான்செப்ட் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.

சிறிய கார்

சிறிய கார்

சிறிய வகை ஹேட்ச்பேக் கார்களில் டாடா நானோவும், மாருதி செலிரியோவும் ஆன்லைனில் அதிக அளவில் குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செவர்லே பீட், ஹூண்டாய் சான்ட்ரோ ஆகிய மாடல்கள் அடுத்தடுத்த இடங்களில் இருந்தன.

பெரிய ஹேட்ச்பேக் கார்

பெரிய ஹேட்ச்பேக் கார்

பெரிய வகை ஹேட்ச்பேக் மாடல்களில் டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் ஆன்லைனில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மாடலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஃபோர்டு ஃபிகோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்கள் ஆன்லைனில் அதிர்வுகளை ஏற்படுத்திய மாடல்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸிகியூட்டிவ் செடான்

எக்ஸிகியூட்டிவ் செடான்

எக்ஸிகியூட்டிவ் செடான் வகை கார்களில் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் அதிக அளவில் குறிப்பிடப்பட்ட பிராண்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிவி ரகம்

எம்பிவி ரகம்

எம்பிவி வகையில் டொயோட்டா இன்னோவா அதிக அளவில் குறிபிடப்பட்ட பிராண்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்த இடத்தை மாருதி எர்டிகா பிடித்துள்ளது.

மிட்சைஸ் கார்

மிட்சைஸ் கார்

மிட்சைஸ் கார்களில் எட்டியோஸ் செடான் கார் ஆன்லைனில் அதிகம் குறிப்பிடப்பட்ட பிராண்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டொயோட்டா எட்டியோஸ், டாடா ஸெஸ்ட் மற்றும் டாடா இண்டிகோ ஆகிய மூன்று கார்களுமே சம அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 3, 2014, 9:16 [IST]
English summary
February was the month when the internet was dominated by auto related activities due to the Delhi Auto Expo 2014 that took place early in the month. But did you wonder which car maker and which car models were the most talked about or mentioned online?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+