ஒரு மணிநேரத்தில் 400 கார்களை சுத்தப்படுத்தும் கார் வாஷ் ஸ்டேஷன்!
கார் கழுவுவதற்கு கால் கடுக்க நிற்கும் நிலை பல நகரங்களில் காணப்படுகிறது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கார் கழுவும் நிலையங்களில் கட்டுங்கடங்கா கூட்டத்தை காண முடிகிறது.
இந்த நிலையில், ஜெர்மனியில் செயல்பட்டு வரும் கார் கழுவும் நிலையம் ஒன்று, ஒரு மணிநேரத்தில் 400 கார்களை கழுவி சுத்தப்படுத்தும் வசதிகளை பெற்றுள்ளது. மிஸ்டர் வாஷ் என்ற பெயரிலான இந்த கார் கழுவும் நிலையம் உலகின் பெரிய கார் கழுவும் மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

6 மையங்கள்
மிஸ்டர் வாஷ் நிறுவனம் 6 கார் கழுவும் நிலையங்களை வைத்திருக்கிறது. அதில், ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் இருக்கும் மையம்தான் பெரியது.

அடுக்குமாடி
ஸ்டட்கர்ட் நகரில் இருக்கும் கார் கழுவும் மையம் 40 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கட்டப்பட்டு இருக்கிறது. இது இரண்டடுக்கு கட்டடமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு அரை மில்லியன் கார்களை கழுவும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

8 நிமிடங்களில் கார் ரெடி
ஒரு மணிநேரத்தில் 400 கார்களை இந்த மையத்தில் கழுவி சுத்தம் செய்து தருகின்றனர். 8 நிமிடங்களில் ஒரு காரை கழுவி சுத்தம் செய்து டெலிவிரி கொடுக்கின்றனர். அதாவது, அந்த நிறுவனத்தின் ஓய்வறையில் ஒரு காஃபி அருந்தும் நேரத்தில் கார் கழுவி கைக்கு கிடைத்துவிடும்.

இன்டிரியர் க்ளினீங்
இன்டிரியர் க்ளினீங்கும் எந்திரங்களின் துணையுடன் படுதுரிதமாக இங்குள்ள பணியாளர்கள் செய்கின்றனர்.

கட்டணம்
விலையுயர்ந்த போர்ஷே, பென்ஸ் போன்ற கார்களுக்கு கூட, ஒரு காரை கழுவுவதற்கு 6 யூரோக்கள் மட்டுமே கட்டணம். மிக நேர்த்தியாக, நவீன முறையில் சுத்தப்படுத்தி தருவதால் கூட்டம் அலைமோதுகிறது.
வீடியோ
மிஸ்டர் வாஷ் நிலையத்தில் கார்கள் கழுவப்படும் வீடியோ.
Via: CarBuzz


Click it and Unblock the Notifications








