புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ!
புத்தம் புதிய 7 சீட்டர் சொகுசு எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருப்பதாக பிஎம்டபிள்யூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்7 என்ற பெயரில் வரும் இந்த புதிய மாடல் 2018ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பிஎம்டபிள்யூவின் டிசைன் தாத்பரியங்களும், எதிர்கால டிசைன் தாத்பரியங்களையும் கலந்து கட்டிய புதிய டிசைனில் இந்த புதிய மாடல் வருகிறது.

இது மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் மிகச் சிறப்பான சொகுசு வசதிகள் கொண்டதாக இருக்கும். இது 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த புதிய எஸ்யூவி மாடலில் 6 சிலிண்டர் அல்லது 8 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ், ரேஞ்ச்ரோவர் போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியை கொடுப்பதாக இருக்கும்.
வட அமெரிக்காவில் உள்ள ஸ்பர்தன்பர்க் உள்ள பிஎம்டபிள்யூ கார் ஆலையில் இந்த புதிய எக்ஸ்7 எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த ஆலை திறக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்திலேயே இந்த புதிய எக்ஸ்7 எஸ்யூவி குறித்த அறிவிப்பையும் பிஎம்டபிள்யூ வெளியிட்டிருக்கிறது. மேலும், ஸ்பர்தன்பர்க் ஆலையை விரிவுப்படுத்துவதற்காக 1 பில்லியன் டாலரை முதலீடு செய்ய இருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








