இந்த மாதம் ரிலீசாகும் புதிய கார் மாடல்கள்: ஒரு பார்வை

By Saravana

பண்டிகை காலத்தையொட்டி பல புதிய கார் மாடல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால், கார் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது கனவு கார்களை வீட்டுக்கு கொண்டு செல்ல ஆர்வமுடன் கார் வாங்கும் படலத்தை துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய கார் மாடல்கள் பற்றிய தொகுப்பாக வழங்கப்படுகிறது. இது புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு நினைவூட்டும் செய்திகா அமையும்.


ஸ்கோடா யெட்டி

ஸ்கோடா யெட்டி

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் யெட்டி எஸ்யூவி நாளை விற்பனைக்கு வர இருக்கிறது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் புதுப்பொலிவுடன் வருகிறது. இந்த புதிய மாடலில் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ரூ.15 லட்சம் முதல் ரூ.19 லட்சம் விலைப் பட்டியலில் ஸ்கோடா யெட்டி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பென்ஸ் இ கிளாஸ் ( 350சிடிஐ)

பென்ஸ் இ கிளாஸ் ( 350சிடிஐ)

மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் காரின் புதிய டீசல் வேரியண்ட் நாளை மறுதினம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் இ 350 சிடிஐ என்ற பெயரில் வரும் இந்த புதிய வேரியண்ட் பென்ஸ் இ- கிளாஸ் காரின் டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. இந்த புதிய மாடலுக்கு ஏஎம்ஜி ஆக்சஸெரீஸ்களையும் வழங்க பென்ஸ் முடிவு செய்துள்ளது. இந்த புதிய இ கிளாஸ் மாடலில் 245 பிஎஸ் பவரை அளிக்கும் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

லம்போர்கினி ஹூராகென்

லம்போர்கினி ஹூராகென்

வரும் 22ந் தேதி இந்தியாவில் லம்போர்கினி ஹூராகென் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த காரில் 610 பிஎஸ் பவரையும், 560என்எம் டார்க்கையும் அளிக்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்தியாவில் ரூ.3.4 கோடி விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ

இந்த மாதம் 30ந் தேதி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்ஏ காம்பேக்ட் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இளைய கோடீஸ்வர வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த புதிய மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் களமிறக்குகிறது. ஏ கிளாஸ் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த கிராஸ்ஓவர் ரக மாடல் பெட்ரோல் மற்றும் டீசலில் விற்பனைக்கு வர உள்ளது. ரூ.30 லட்சத்தையொட்டிய விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ஆட்டோ ரேபிட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் வரும் 30ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. புதிய ஸ்கோடா ரேபிட் காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடலில் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 9, 2014, 14:21 [IST]
English summary
Car companies are gearing up to launch new car models for this festival season. Here are given details of new car model launches in this September.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+