இந்த வாரத்தில் ரிலீசாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

பண்டிகை காலம் துவங்கிவிட்டதன் அறிகுறியாக கார் மார்க்கெட்டில் ஒன்றன்பின் ஒன்றாக புதிய மாடல்கள் வரிசை கட்டி வருகின்றன. குறிப்பாக, இந்த வாரம் பல புதிய மாடல்கள், ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள், ஸ்பெஷல் எடிசன் என களைகட்டி நிற்கிறது.

நேற்று லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் பல புதிய மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அந்த கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


லம்போ ஹூராகென்

லம்போ ஹூராகென்

உலக அளவில் பெரும் முன்பதிவு எண்ணிக்கையை பதிவு செய்திருக்கும் லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார் நேற்று ரூ.3.43 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியா வந்திருக்கிறது. இந்தியாவிலும் சிறப்பான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளையும், நாளை மறுதினமும் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கார் மாடல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்

நாளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வென்ட்டோ செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சம் 1.5 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாடல். இந்த புதிய வென்ட்டோ மாடல் பற்றிய முழுமையான கூடுதல் விபரங்களை நாளை வழங்குகிறோம்.

 ரெனோ டஸ்ட்டர் AWD

ரெனோ டஸ்ட்டர் AWD

ரெனோ டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடலும் நாளை விற்பனைக்கு வர இருக்கிறது. பெரும் வெற்றியை ருசித்த டஸ்ட்டருக்கு தற்போது ஆல் வீல் டிரைவ் மாடல் அவசியமாகியுள்ளது. கார் பிரியர்கள் இந்த மாடலுக்காக காத்திருக்கின்றனர். 2 வீல் டிரைவ் மாடலைவிட ரூ.1 லட்சம் கூடுதலான விலையில் வரும் என தெரிகிறது. இந்த புதிய மாடல் பற்றிய தகவல்களையும் நாளை முழுமையாக காணலாம்.

 ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட்

நாளை மறுதினம் ஸ்கோடா ரேபிட் செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வர இருக்கிறது. ஸ்கோடாவின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வென்ட்டோ செடான் கார் போன்றே ரேபிட் காரிலும் புதிய 1.5 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் தற்போதைய வெற்றிகரமான மாடலாகவும், வாடிக்கையாளர்களின் விருப்பமான மாடல்களில் ஒன்றாகவும் இருப்பதால், இந்த காருக்கு பலர் வெயிட்டிங். நாளை மறுதினம் முழுமையான தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படிக்கலாம்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக ஏராளமான டிசைன் மாற்றங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வருகிறது. நாளை மறுதினம் வர இருக்கும் இந்த புதிய மாடலுக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கிவிட்டது. இந்த புதிய மாடல் விற்பனையில் பெரும் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாளை மறுதினம் இந்த புதிய மாடல் பற்றிய விபரங்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படிக்கலாம்.

செவர்லே செயில் யுவா மற்றும் செயில் செடான்

செவர்லே செயில் யுவா மற்றும் செயில் செடான்

பண்டிகை கால விற்பனையை மனதில் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்வதற்காக செயில் செடான் மற்றும் செயில் ஹேட்ச்பேக் கார்களை புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்ய இருக்கிறது செவர்லே. நாளை மறுதினம் இந்த புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் தகவல்களை முழுமையாக காண டிரைவ்ஸ்பார்க் தளத்திலோ அல்லது எங்களது ஃபேஸ்புக் பக்கத்திலோ தொடர்பில் இருங்கள்.

உடனுக்குடன்...

உடனுக்குடன்...

எங்களது அப்டேட்டுகளையும், பிரத்யேக ஆட்டோமொபைல் செய்திகளையும் தெரிந்துகொள்ள எங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்பில் இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 23, 2014, 10:53 [IST]
English summary
Auto industry is busy this week (2014 Sept. 22-25) as Country's Major Car manufacturers lined upto launch 6 attractive models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+