புதிய ஃபியட் புன்ட்டோ எவோ காரின் சென்னை விலை விபரம்

By Saravana

சென்னையில் புதிய ஃபியட் புன்ட்டோ எவோ கார் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

சிறப்பான தோற்றம், கூடுதல் வசதிகள், நிறைந்த பாதுகாப்பு வசதிகளுடன் வந்துள்ள புதிய ஃபியட் புன்ட்டோ கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டெல்லியில் வைத்து நேற்றுமுன்தினம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய கார் நேற்று சென்னையிலும் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது.

Fiat Punto Evo

இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஃபியட் கிறைஸ்லர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் நாகேஷன் பசவனஹள்ளி, அடுத்த இரு மாதங்களில் அவென்டுரா மாடலும், இந்த ஆண்டு இறுதிக்குள் அபார்த் 500 மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வாடிக்கையாளர்கள் எளிதாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் 4 விதமான எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது.

இந்த புதிய காருக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 45,000 கிமீ.,க்கான வாரண்டியை சலுகை கட்டணங்களில் ஃபியட் வழங்குகிறது. மேலும், 2 ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தையும் வாடிக்கையாளர்கள் விருப்பத்தின்பேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.

சென்னையில் புதிய ஃபியட் புன்ட்டோ எவோ காரின் விலை விபரம்

பெட்ரோல்

ஆக்டிவ்: ரூ.4.67,509
டைனமிக்: ரூ.5,24,521
எமோஷன்: ரூ.6,80,863

டீசல்

ஆக்டிவ்: ரூ.5,40,005
டைனமிக்: ரூ.6,35,760
எமோஷன்: ரூ.6.98,822
ஸ்போர்ட்ஸ்: ரூ.7,35,894

(அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை).

More from DriveSpark

Article Published On: Thursday, August 7, 2014, 15:38 [IST]
English summary
Italian car maker Fiat has launched new Punto Evo in Chennai yesterday at Rs. 4.67 lakh. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+