நவ.14ல் அடுத்த தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி அறிமுகம்?
வரும் 14ந் தேதி புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய பிரிவு உருவாக்கியிருக்கும் இந்த புதிய எண்டெவர் இதுவரை கான்செப்ட் மாடலாக காட்சி தந்து வந்தது.
ஆட்டோமொபைல் ஆக்சஸெரீஸ் மீது 75 சதவீதம் தள்ளுபடி - விபரம்!
பிற நாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனைக்கு செல்ல இருக்கும் இந்த புதிய மாடல் எண்டெவர் என்ற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடலை களமிறக்க உள்ளது ஃபோர்டு.

கூடுதல் சொகுசு
சேஸீ, சஸ்பென்ஷன் அமைப்பில் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது. காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதால் சொகுசான பயணத்தை வழங்கும்.

எஞ்சின் விபரம்
இன்டிரியர் டிசைனிலும்ம மாற்றங்களுடன் கூடுதல் வசதிகள் கொண்டதாக இருக்கும். 2.5 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். தற்போதைய மாடலில் இருக்கும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்களுக்கு பதிலாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வரும்.

இந்தியாவுக்கு எப்போது?
வரும் 14ந் தேதி உலக அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்க்கும் விலை
ரூ.22 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்குள் இந்த புதிய ஃபோர்டு எண்டெவர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் உற்பத்தி
தாய்லாந்திலிருந்து பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு சென்னை ஆலையில் அசெம்பிள் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








