புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி அறிமுகம் - தகவல்கள்

By Saravana

முற்றிலும் மாறுபட்ட டிசைனில் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய டிசைன் பிரிவின் தலைமையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் நவீன வசதிகள் கொண்ட ஓர் சிறப்பான ஆஃப்ரோடு மாடலாகவும் வருகிறது.


புதிய சேஸீ

புதிய சேஸீ

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலுக்கும், தயாரிப்பு நிலை மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. புதிய லேடர் ஃப்ரேம்(சேஸீ) கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காயில் ஸ்பிரிங் கொண்ட புதிய சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டதாக வருகிறது.

 புதிய 4 வீல் டிரைவ் சிஸ்டம்

புதிய 4 வீல் டிரைவ் சிஸ்டம்

டெரானோ ரெஸ்பான்ஸ் என்ற புதிய 4 வீல் டிரைவ் சிஸ்டத்தின் வாயிலாக டிராக்ஷன் கன்ட்ரோல், எஞ்சின் டார்க் போன்றவற்றை தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் வசதி ஆஃப் ரோடு பயன்பாட்டிற்கு சிறப்பாக அமையும்.

 இன்டிரியர்

இன்டிரியர்

இதன் கேபின் ஃபோர்டு எஃப் 150 பிக்கப் டிரக்கின் அடிப்படையிலான டிசைன் தாத்பரியங்களை கொண்டுள்ளது ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், புதிய 8 இஞ்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் ஃபோர்டு SYNC -2 தகவல் பரிமாற்ற வசதியும் கொண்டிருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

சர்வதேச அளவில் புதிய எண்டெவர் எஸ்யூவி 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மாடல் மட்டுமின்றி, 3.5 லிட்டர் 5 சிலிண்டர் டீசல் எஞ்சின், 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. பழைய 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுக்கு பதிலாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்தியாவில் தற்போது இருக்கும் 2.5 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் டீசல் மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

அடுத்த ஆண்டு மத்தியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரும் இந்த புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி தொடர்ந்து இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவில் ரூ.20 லட்சம் ரூ.25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 13, 2014, 18:29 [IST]
English summary
Ford has officially revealed the production version of the 2015 Endeavour(Everest in other markets). 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+