மீண்டும் லீ மானஸ் ரேஸில் குதிக்கும் ஃபோர்டு... புதிய ஜிடி மாடலை தயாரிக்கிறது?!
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் புதிய ஜிடி வகை கார் மாடலை தயாரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.
இதன்மூலம், நீண்ட இடைவெளிக்கு பின்னர் லீ மான்ஸ் கார் பந்தயத்தில் களமிறங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகளால் ரேஸ் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லீ மான்ஸ் ரேஸ்
உலக அளவில் புகழ்பெற்ற என்டியூரன்ஸ் வகையிலான லீ மான்ஸ் கார் பந்தயத்தில் ஃபெராரியின் கொட்டத்தை அடக்குவதற்காக ஃபோர்டு நிறுவனம் தயாரித்த கார் மாடல்தான் ஃபோர்டு ஜிடி40.

வெற்றி, வெற்றி...
1966 முதல் 1969 வரையில் நான்கு ஆண்டுகள் லீ மான்ஸ் கார் பந்தயத்தில் ஃபோர்டு ஜிடி40 கார் வெற்றி பெற்றது. 6 ஆண்டுகளாக லீ மான்ஸ் கார் பந்தயத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஃபெராரியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்தது ஃபோர்டு ஜிடி40.

முதல் அமெரிக்க மாடல்
லீ மான்ஸ் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் அமெரிக்க கார் மாடல் ஃபோர்டு ஜிடி40 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரபரப்பு
இந்த நிலையில், லீ மான்ஸ் கார் பந்தயத்தில் மீண்டும் களமிறங்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய மாடல்
ஃபோர்டு ஜிடி40 மாடலை அடிப்படையாகக் கொண்டு லீ மான்ஸ் கார் பந்தயத்திற்காக புதிய ஜிடி மாடலை ஃபோர்டு நிறுவனம் வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய மாடலில் 3.5 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்பதும் கூடுதல் தகவல்.

எப்போது வருகிறது?
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையெனில், வரும் 2016ம் ஆண்டு லீ மான்ஸ் கார் பந்தயத்தில் ஃபோர்டு களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லீ மான்ஸ் கார் பந்தயத்தில் மீண்டும் ஃபோர்டு களமிறங்க உள்ளதாக வெளியான தகவல்களால் ரேஸ் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








