9,000 முன்பதிவுகளை வாரி குவித்த புதிய ஹோண்டா மொபிலியோ!
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு வாரம் ஆகிய நிலையில், புதிய ஹோண்டா மொபிலியோவுக்கு இதுவரை 9,000 பேர் முன்பதிவு ஹோண்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 23ந் தேதி புதிய 7 சீட்டர் எம்பிவி காரான மொபிலியோவை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது ஹோண்டா. அதிக இடவசதி, ஸ்டைல், வசதிகள், அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சின் போன்ற பலத்துடன் மார்க்கெட்டில் களமிறங்கியது.

ஹோண்டா பிராண்டு மதிப்பும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. இதனால், மொபிலியோ காருக்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,000க்கும் அதிகமான முன்பதிவு எண்ணிக்கை மொபிலியோ பெற்றுள்ளதாக ஹோண்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கிறது.
முன்பதிவு அதிகரித்து வருவதால் மொபிலியோவுக்கான காத்திருப்பு காலமும் வெகுவாக அதிகரித்துள்ளது. மாருதி எர்டிகா காருக்கு மட்டுமின்றி, டொயோட்டா இன்னோவா காரின் விற்பனையிலும் மொபிலியோ தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








