மைலேஜில் இந்தியாவின் நம்பர்-1 எம்பிவி காராக வரும் மொபிலியோவுக்கு முன்பதிவு துவங்கியது!

By Saravana

வரும் 23ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹோண்டா மொபிலியோ காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஹோண்டா டீலர்களில் இந்த புதிய எம்பிவி காருக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தநிலையில், பெரும் எதிர்பார்ப்பை கிளறியுள்ள மொபிலியோவின் டீசல் மாடலின் மைலேஜ் விபரங்கள் வெளியாகியுள்ளன.


நம்பர்-1 பெருமை

நம்பர்-1 பெருமை

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் எம்பிவி கார் என்ற பெருமையை ஹோண்டா மொபிலியோவின் டீசல் மாடல் பெற இருக்கிறது. ஆம், ஹோண்டா மொபிலியோ காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 24.2 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.3 கிமீ மைலேஜ் தருவதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மைலேஜில் மட்டுமல்ல

மைலேஜில் மட்டுமல்ல

டீசல் மாடல் மைலேஜில் மட்டுமல்ல பவரிலும் கலக்கலாக இருக்கும். ஆம், இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடலில் 119பிஎஸ் பவரையும், 145 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். பெட்ரோல், டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது. ஆட்டோமேட்டிக் மாடலில் வராது என்று தெரிகிறது.

பிரிமியம் மாடல்

பிரிமியம் மாடல்

ஏராளமான சிறப்பு வசதிகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள் போன்ற வசதிகளுடன் வருகிறது. மிக தாராள இடவசதியை கொண்டிருக்கும் என ஹோண்டா பிரச்சாரம் செய்து வருகிறது.

முன்பதிவு தொகை

முன்பதிவு தொகை

ரூ.50,000 முன்பணத்தை செலுத்தி புதிய ஹோண்டா மொபிலியோ காருக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேரியண்ட் மற்றும் கலருக்கு ஏற்ப காத்திருப்பு காலம் மாறுபடும். ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 9, 2014, 16:28 [IST]
English summary
Japanese car maker Honda has now officially opened bookings for its latest Mobilio MPV in India. The Mobilio’s booking amount is pegged at 50,000 rupees.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+