பெங்களூரில் விற்பனைக்கு வந்தது புதிய ஹோண்டா மொபிலியோ!
பெங்களூரில் புதிய ஹோண்டா மொபிலியோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பன்முக பயன்பாட்டு ரகத்தில் வந்திருக்கும் இந்த புதிய கார் சமீபத்தில் டெல்லியில் வைத்து இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முக்கிய நகரங்கள் வழியாக மாநில அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், வலுவான கார் விற்பனை ஸ்தலமாக திகழும் பெங்களூரில் இன்று புதிய மொபிலியோ காரின் விற்பனைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பெங்களூர் மார்க்கெட்டுக்கான விலை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. ரூ.6.83 லட்சம் முதலான விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடலில் ஆர்எஸ் என்ற பிரத்யேக பாடி கிட் பொருத்தப்பட்ட மாடலுக்கும் முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது.
செப்டம்பர் முதல் டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம் என ஹோண்டா தெரிவித்துள்ளது. 7 சீட்டர் எம்பிவி ரகத்தில் வந்திருக்கும் இந்த புதிய காரின் பெங்களூர் விலை விபரங்களை வேரியண்ட் வாரியாக கீழே காணலாம்.
பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை விபரம்:
பெட்ரோல்
இ- வேரியண்ட்: ரூ.6.83 லட்சம்
எஸ்- வேரியண்ட் - ரூ.7.85 லட்சம்
வி- வேரியண்ட்: ரூ.9.06 லட்சம்
டீசல்
இ- வேரியண்ட்: ரூ.8.25 லட்சம்
எஸ் - வேரியண்ட்: ரூ.8.99 லட்சம்
வி- வேரியண்ட்: ரூ.10.18 லட்சம்
ஆர்எஸ்: ரூ.11.31 லட்சம்


Click it and Unblock the Notifications








