நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் ஹோண்டா மொபிலியோ ஆர்எஸ்!!
அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார் ஏற்கனவே இந்தோனேஷிய மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துவிட்டது. அங்கு விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது.
இதுவரை 35,000க்கும் அதிகமான ஹோண்டா மொபிலியோ கார்கள் அங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் உற்சாகத்தில் மிதந்து வரும் ஹோண்டா கார் நிறுவனம் மொபிலியோ ஆர்எஸ் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
டிசைனில் சிறிய மாற்றங்கள், கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் புதிய ஹோண்டா மொபிலியோ ஆர்எஸ் படு கவர்ச்சியாக இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

மாடல்கள்
புதிய ஹோண்டா மொபிலியோ ஆர்எஸ் சிவிடி டிரான்ஸ்மிஷன் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட இரண்டு விதமான மாடல்களில் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது.

தோற்றம்
எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் மற்றும் கிரில் ஆகியவை முகப்பை இன்னும் கம்பீரமாக காட்டுகிறது. கருப்பு நிற இன்டிரியர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்
ஃபுல் பாடி கிட்டுடன் ரூஃப் ஸ்பாய்லர், புதிய சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை ஹோண்டா மொபிலியோ ஆர்எஸ் பெற்றிருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களை இந்த கார் பெரிதும் கவரும்.

விலை விபரம்
இந்தோனேஷியாவில் சிவிடி டிரான்ஸ்மிஷன் மாடல் இந்திய மதிப்பில் ரூ.10.76 லட்சம் விலையிலும், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் ரூ.10.23 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








