பிப்ரவரி 4ல் அறிமுகமாகிறது புதிய ஹூண்டாய் காம்பெக்ட் செடான் கார்!
அடுத்த மாதம் 4ந் தேதி டெல்லி தாஜ் பேலஸ் ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய ஹூண்டாய் காம்பெக்ட் செடான் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வரும் இந்த புதிய கார் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட ஆக்சென்ட் காருக்கு மாற்றாக இந்த புதிய காம்பெக்ட் செடான் கார் நிலைநிறுத்தப்பட உள்ளது.
அடுத்த மாத இறுதியில் இந்த கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது விலை விபரம் வெளியிடப்படும்.
இது ஹூண்டாய் ஐ20 காரைவிட சற்று கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.
மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு இந்த புதிய காம்பெக்ட் செடான் போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








