பெங்களூரில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் எலைட் ஐ20: விலை விபரம்
பெங்களூரில் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சிறப்பான டிசைன் மற்றும் ஏராளமான வசதிகளுடன் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சினும், டீசல் மாடலில் 1.4 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளது. 1 ஜிபி மெமரியுடன் கூடிய 2 டின் ஆடியோ சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட், மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்மார்ட் பெடல், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
பெட்ரோல்
எரா: ரூ4.98 லட்சம்
மேக்னா: ரூ.5.51 லட்சம்
ஸ்போர்ட்ஸ்: ரூ.6.04 லட்சம்
ஸ்போர்ட்ஸ்(ஓ): ரூ.6.36 லட்சம்
அஸ்டா: ரூ.6.58 லட்சம்
டீசல்
எரா: ரூ.6.20 லட்சம்
மேக்னா: ரூ.6.73 லட்சம்
ஸ்போர்ட்ஸ்: ரூ.7.26 லட்சம்
ஸ்போர்ட்ஸ்(ஓ): ரூ.7.58 லட்சம்
அஸ்டா: ரூ.7.80 லட்சம்


Click it and Unblock the Notifications








