புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பெட்ரோல் மாடலுக்கு அதிக முன்பதிவு!
புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு முதல்கட்ட நிலவரப்படி 4,600 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில், ஆச்சரியப்படத்தக்க வகையில், டீசல் மாடலைவிட பெட்ரோல் மாடலுக்கு அதிக முன்பதிவு கிடைத்துள்ளது.
கடந்த 1ந் தேதி முதல் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

விலை எதுவும் தெரியாதபோதே, விற்பனைக்கு முன்பாக ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு 4,600 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதில், பெட்ரோல் மாடலுக்கு 2,600 பேரும், டீசல் மாடலுக்கு 2,000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக விற்பனைக்கு வரும் புதிய கார் மாடல்களில் பெட்ரோலைவிட டீசல் மாடலுக்கே அதிக முன்பதிவு கிடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வழக்கத்திலிருந்து மாறி புதிய ஐ20 காரின் பெட்ரோல் மாடலுக்கு அதிக முன்பதிவு கிடைத்துள்ளது தயாரிப்பாளர்களை யோசிக்க வைக்கும் விஷயமாகியுள்ளது.
புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் வருவதற்கு முன்னரே பெட்ரோல் மாடலுக்கு அதிக முன்பதிவு கிடைத்துள்ளது.
பெட்ரோல், டீசலுக்கு இடையிலான விலை வித்தியாசம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் கவனம் தற்போது பெட்ரோல் மாடலை நோக்கி செல்வது எலைட் ஐ20 கார் மூலம் உணரப்படுகிறது.
இருந்தாலும், இது முதல் ரவுண்ட் நிலவரம்தான். போகப் போக இந்த நிலை நீட்டிக்கிறதா அல்லது டீசல் முந்துகிறதா என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








