புதிய லம்போர்கினி ஹைபிரிட் சூப்பர் கார் கான்செப்ட் அறிமுகம்
பாரிஸ் மோட்டார் ஷோவில் புதிய லம்போர்கினி ஹைபிரிட் சூப்பர் காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. லம்போர்கினி அஸ்டிரியோன் LPI910-4 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் மாடல் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் தொழில்நுட்பம் கொண்டது.
லாஃபெராரி, மெக்லாரான் பி1, போர்ஷே 918 ஸ்பைடர் போன்ற கார்களை பார்த்து தனது முதல் ஹைபிரிட் கான்செப்ட்டை லம்போர்கினி அறிமுகம் செய்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும், தனது ஹைபிரிட் சிஸ்டத்தை விளக்கும் மாடலாக இந்த கான்செப்ட்டை லம்போர்கினி குறிப்பிட்டுள்ளது. மிக நீளமான பானட்டுடன் கூடிய கூபே வகை மாடலாக வந்திருக்கும் இந்த புதிய ஹைபிரிட் சூப்பர் கார் மாடலை பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தினசரி பயன்பாடு
டிராக்கில் பெர்ஃபார்மென்ஸை காட்டுவதைவிட தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மிகச்சிறந்த சூப்பர் கார் மாடலாக இதனை லம்போர்கினி குறிப்பிடுகிறது.

ஹைபிரிட் சிஸ்டம்
பெட்ரோல் எஞ்சின்- எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இயங்கும் இந்த காரின் ஹைபிரிட் சிஸ்டம் முதல்முதலாக லம்போர்கினி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலான உரஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட உள்ளது.

எஞ்சின் மற்றும் மின் மோட்டார்
ஹூராகென் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 602 பிஎச்பி பவரை அளிக்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, மூன்று எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களும் இணைந்து 296 பிஎச்பி பவரை அளிக்கும். ஹைபிரிட் சிஸ்டத்தில் அதிகபட்சமாக 898 பிஎச்பி பவர் கொண்ட மாடலாக இதனை லம்போர்கினி தெரிவிக்கிறது.

ரேஞ்ச்
பேட்டரியில் மட்டும் இயங்கும்போது 50 கிமீ தூரம் வரை ரேஞ்ச் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 125 கிமீ வேகத்தில் செல்லும். லித்தியம் அயான் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் உதிரிபாகங்களின் எடை 250 கிலோ மட்டுமே.

பெர்ஃபார்மென்ஸ்
லம்போர்கினி அஸ்டிரியோன் கான்செப்ட் மாடல் 0- 100 கிமீ வேகத்தை 3.0 வினாடிகளில் எட்டும். இது அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லத்தக்க அம்சங்களை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








