மாருதி செலிரியோவுக்கு முன்பதிவு துவங்கியது: மைலேஜ் எவ்வளவு தெரியுமா?
கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அமைப்புடன் வரும் புதிய மாருதி செலிரியோ காருக்கு முன்பதிவு துவங்கியுள்ளது.
இதுதவிர, இந்த காருக்கான அதிகாரப்பூர்வ இணையப் பக்கமும் திறக்கப்பட்டுள்ளது. அதில், மைலேஜ் உள்ளிட்ட சில விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிளட்ச் பெடல் இருக்காது
இந்த புதிய மாருதி கார் செமி ஆட்டோமேட்டிக் காராக வர இருக்கிறது. இதில், கிளட்ச் பெடல் இருக்காது. அதேவேளை, கியர் லிவரை மாற்ற வேண்டியிருக்கும். கிளட்ச் இயக்கத்தை சிறிய கம்ப்யூட்டர் கட்டுப்படுத்தும்.

எஞ்சின்
மாருதி செலிரியோ காரில் 1.0 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 69 பிஎஸ் பவர் கொண்டதாக இருக்கும்.

மைலேஜ்
சோதனை நிலைகளின்படி, லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜ் தருவதாக மாருதி தெரிவித்துள்ளது.

பூட் ரூம்
235 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் கொண்டிருக்கிறது செலிரியோ.

வசதிகள்
டியூவல் டோன் இண்டிரியர், மேனுவல் ஏசி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஹெட்ரெஸ்ட் இணைந்த முன் இருக்கைகள், புளூடூத் வசதியுடன் ஆடியோ சிஸ்டம், இண்டிகேட்டர் கொண்ட ரியர் வியூ கண்ணாடி ஆகியவற்றுடன் வருகிறது.

அறிமுகம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய காருக்கு தற்போது முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. மாருதியின் சிறந்த நகர்ப்புற பயன்பாட்டு கார் மாடல்களின் வரிசையில் செலிரியோவுக்கும் முக்கிய இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.இதர விபரங்களை தொடர்ந்து வழங்க இருக்கிறோம்.

விலை
ரூ.3.9 லட்சம் முதல் ரூ.4.78 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








