அப்பாடா... ஒருவழியாக அக்.6ல் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சியாஸ்
பெரும் தாமதத்திற்கு பின்னர் புதிய மாருதி சியாஸ் கார் வருகை உறுதியாகியுள்ளது. வரும் 6ந் தேதி இந்த புதிய மிட்சைஸ் காரை மாருதி முறைப்படி விற்பனைக்கு கொண்டு வருகிறது.
ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டு விட்ட இந்த புதிய சியாஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் தலா 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது.

பெட்ரோல் மாடலில் 91 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 கே சீரிஸ் எஞ்சினும், டீசல் மாடலில் 89 பிஎச்பி பவரை அளிக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாகவும் வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.
ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார் மாடல்களுக்கு நேரடி போட்டியாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு வருகிறது. கணிசமான முன்பதிவு எண்ணிக்கையை கைவசம் வைத்துக் கொண்டு களத்தில் குதிக்கும் புதிய சியாஸ் கார் முதல் மாதத்திலேயே மார்க்கெட் லீடர் ஹோண்டா சிட்டியை போட்டுத் தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு தக்கவாறு இதுவரை 9,000 சியாஸ் கார்களை உற்பத்தி செய்து டெலிவிரி கொடுக்க தயார் நிலையில் மாருதி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ரூ.7.50 லட்சம் முதல் ரூ.11.5 லட்சம் வரையிலான விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








