டெலிவிரி எடுத்து ஒரேநாளில் விபத்தில் உருக்குலைந்த மெக்லாரன் கார்!

By Saravana

அமெரிக்காவில், டெலிவிரி எடுத்து மறுநாளே புதிய மெக்லாரன் பி1 கார் விபத்தில் சிக்கி கடுமையாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

டல்லாஸ் நகரில் உள்ள ஷோரூமிலிருந்து டெலிவிரி எடுத்து அடுத்த 24 மணிநேரத்திற்குள் அந்த கார் விபத்தில் சிக்கியது. சாலையின் பக்கவாட்டில் இருந்த இரும்புத் தடுப்பின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டிய 27வயது இளைஞரும், அவருடன் வந்த 24வயது நண்பரும் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் சிக்கிய கார் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

மதிப்பு

மதிப்பு

விபத்தில் சிக்கிய மெக்லாரன் பி1 கார் இந்திய மதிப்பில் ரூ.6.20 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிமிடேட் எடிசன் மாடல்

லிமிடேட் எடிசன் மாடல்

மொத்தம் 375 மெக்லாரன் பி1 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதில் ஒரு கார் மிக மோசமான விபத்தில் சிக்கி உருக்குலைந்துவிட்டது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0- 100 கிமீ: 2.8 வினாடிகள்

0- 200 கிமீ: 6.8 வினாடிகள்

0- 300 கிமீ: 16.5 வினாடிகள்

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மெக்லாரன் பி1 கார் அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் கார் டெலிவிரி

முதல் கார் டெலிவிரி

கடந்த அக்டோபர் மாதம்தான் இந்த புதிய காரின் டெலிவிரியை மெக்லாரன் நிறுவனம் துவக்கியது. இங்கிலாந்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு மஞ்சள் நிற மெக்லாரன் பி 1 டெலிவிரி கொடுக்கப்பட்டது.

ஒரு காருக்கு 17 நாட்கள்

ஒரு காருக்கு 17 நாட்கள்

ஒவ்வொரு மெக்லாரன் பி1 காரையும் ஒருங்கிணைப்பு மையத்தை சேர்ந்த 82 நிபுணர்களின் கைகளால் 17 நாட்கள் எடுத்துக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. மொத்தம் 4 கட்டமாக அசெம்பிள் செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, December 1, 2014, 17:33 [IST]
English summary

 As it turns out, the young driver who crashed the McLaren P1 in Dallas, Texas,
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+