புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி கார் அறிமுகம்- விபரம்

By Saravana

யூகச் செய்திகள், சோதனை ஓட்டப் படங்கள் என ஆட்டோமொபைல் தளங்களை சுறுசுறுப்பாக வைத்திருந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி காரின் படங்கள், விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ்- ஏஎம்ஜி கூட்டணி உருவாக்கிய இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. டிசைன், பவர்ஃபுல் எஞ்சின் பல தன்னிகரற்ற விஷயங்களுடன் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் பற்றிய கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.


மாடல்கள்

மாடல்கள்

இந்த புதிய கார் எஞ்சின் சக்தியை பொறுத்து ஜிடி மற்றும் ஜிடி எஸ் ஆகிய இரு மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. ட்யூனிங்கில் மட்டுமின்றி இரு மாடல்களுக்கும் இடையில் பம்பர், டெயில்பைப் மற்றும் வீல் டிசைனில் மாற்றங்கள் இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

புதிய பென்ஸ்- ஏஎம்ஜி ஜிடி காரில் 4.0 லிட்டர் பை டர்போ வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பெட்ரோல் எஞ்சின் இருவித ட்யூனிங்கில் கிடைக்கும். 456 எச்பி பவரை அளிக்கும் மாடல் ஏஎம்ஜி ஜிடி என்ற பெயரிலும், 510 எச்பி பவரை அளிக்கும் மாடல் ஜிடி எஸ் என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படும். 7 ஸ்பீட் ட்யூவல் கிளட்ச் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி மாடல் 0- 100 கிமீ வேகத்தை 4 வினாடிகளிலும், ஜிடி- எஸ் மாடல் 3.8 வினாடிகளிலும் கடந்துவிடும். ஜிடி மாடல் மணிக்கு 304 கிமீ டாப் ஸ்பீடும், ஜிடி எஸ் மாடல் மணிக்கு 310கிமீ டாப் ஸ்பீடு கொண்டது.

அறிமுகம்

அறிமுகம்

வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் ஷோவில் இந்த கார் முறைப்படி பொதுபார்வைக்கு கொண்டு வரப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஆண்டு இறுதியில் முன்பதிவு துவங்கப்பட உள்ளது. இந்த புதிய கார் போர்ஷே 911 காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

சமீபத்தில் சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காருக்கு மாற்றாக இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்பட உள்ளது. எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கார் 4.95 லட்சம் டாலர் விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய கார் 3 லட்சம் டாலர் விலையில் விற்பனைக்கு வரும் என பென்ஸ்- ஏஎம்ஜி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 11, 2014, 11:27 [IST]
English summary
German luxury car maker Mercedes-Benz's performance car division AMG has revealed the new GT sports car. The new 4.0-litre V8 powered will be replaced the SLS.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+