இந்தியா வருமா புதிய ரெனோ லோகன் செடான் கார்?!

By Saravana

உலக அளவில் பல்வேறு மார்க்கெட்டுகளில் பழைய மாடலுக்கு பதிலாக புதிய லோகன் காரை ரெனோ அறிமுகம் செய்து வருகிறது.

டேஸியா பிராண்டிலும் புதிய லோகன் காரை சில மார்க்கெட்டுகளில் ரெனோ களமிறக்கி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவில் புதிய ரெனோ லோகன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழைய லோகன் காருக்கும் புதிய மாடலுக்கும் டிசைனில் அதிக வித்தியாசங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

New Reno Logan

டேஸியா பிராண்டில் 4 டோர் செடான் மற்றும் 5 டோர் ஸ்டேஷன் வேகன் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு விடப்படுகிறது இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரையில், லோகன் காரை மஹிந்திராவிடம் ரெனோ தாரை வார்த்துவிட்டது. வெரிட்டோ என்று பெயர் மாற்றம் செய்து மஹிந்திரா லோகனை விற்பனை செய்து வருகிறது.

எனவே, புதிய லோகனை ரெனோ கொண்டு வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்து வருகிறது. இருப்பினும், மஹிந்திரா கூட்டணியை விட்டு வெளியேறி தனியாக கார் விற்பனையில் ஈடுபட்டு வரும் ரெனோ தனது மார்க்கெட்டை உயர்த்துவதற்காக புதிய லோகனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 25, 2014, 14:57 [IST]
English summary
Renault will offer their 2014 version of Logan in Russia. The new car will replace the first generation of Logan around the world and will make its way to Russia too.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+