வரும் 10ந் தேதி விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கோடா யெட்டி!
வரும் 10ந் தேதி இந்தியாவில் ஸ்கோடா யெட்டி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு வருகிறது.

பம்பர், பனி விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பாடி லைன்கள் போன்றவை யெட்டி எஸ்யூவியின் தோற்றத்தை கூடுதல் கம்பீரத்தை தருகின்றன.
ஏர்பேக்குகள், கீ லெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் ஸ்டாப் வசதி, ரியர் ஏசி வென்ட்டுகள் போன்றவை சிறப்பு அம்சங்களாக இடம்பெற்றிருக்கும்.
ரூ.15 லட்சம் முதல் ரூ.19 லட்சம் விலைப் பட்டியலில் ஸ்கோடா யெட்டி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








