எஸ்எக்ஸ்4 காருக்கு மாற்றாக வரும் புதிய மாருதி காரின் ஸ்பை படங்கள்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் சியாஸ் என்ற கான்செப்ட் மாடலை மாருதி நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இதே காரை சுஸுகி நிறுவனம் சமீபத்தில் நடந்த பீஜிங் ஆட்டோ ஷோவில் அலிவியோ என்ற பெயரில் காட்சிக்கு வைத்திருந்தது.
டெல்லியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சியாஸ் காரைவிட பீஜீங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கார் தயாரிப்பு நிலைக்கு ஏற்ற கான்செப்ட் மாடலாக பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தது. இந்தநிலையில், சீனாவில் டீலர்ஷிப் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய சுஸுகி அலிவியோ காரை ஆட்டோஹோம் என்ற தளம் ரகசியமாக படம் பிடித்து வெளியிட்டிருக்கிறது.
மாருதி சியாஸ் காராக இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் சுஸுகி அலிவியோ காரின் ஸ்பை படங்கள் கூடுதல் செய்திகளை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
சீனாவில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு வருகிறது. அதாவது, எஸ்எக்ஸ்4 செடான் காரில் இருந்த அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான் இதிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. எனவே, இந்தியாவில் பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலும் வருவது உறுதி.

வடிவம்
மாருதி சியாஸ் கான்செப்ட் 4,545மிமீ நீளமும், 1,730மிமீ அகலமும், 1,475மிமீ உயரமும் கொண்டது. இது ஒரு பர்ஃபெக்ட்டான மிட்சைஸ் செடானாக மாருதி களமிறக்க உள்ளது.

முதலில் சீனாவில்...
இந்த புதிய மிட்சைஸ் செடான் கார் முதலில் சுஸுகி பிராண்டில் சீனாவில்தான் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தீபாவளியையொட்டிய காலத்தில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிடும்.

விலை
ரூ.7.2 லட்சம் முதல் ரூ.10.5 லட்சம் வரையிலான விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பு நிலை
இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கான்செப்ட் நிலையிலான காருக்கும், தயாரிப்பு நிலை மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காது என்ற தெரிகிறது. முன்பக்க கிரில், டெயில் லைட் மற்றும் குரோம் ஹேண்டில் ஆகியவை தயாரிப்பு நிலை மாடலில் மாற்றங்களாக இருக்கும்.

சிட்டி, வெர்னாவுக்கு வேட்டு
மிட்சைஸ் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் புதிய ஹோண்டா சிட்டி கார், ஃப்ளூயிடிக் ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு இந்த புதிய மாருதி செடான் கார் நிச்சயம் நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








