டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் அறிமுகம் - படங்களுடன், தகவல்கள்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் அதிகம் விற்பனையான கார் மாடல் என்ற பெருமையை பெற்ற கரொல்லா ஆல்டிஸ் தனது இடத்தை தொடர்ந்து தக்க வைக்கும் விதமாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

டிசைன்
ஃபியூரியா கான்செப்ட் காரின் டிசைன் தாத்பரியங்களுடன் இந்த புதிய கரொல்லா ஆல்டிஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. 100 மிமீ அளவுக்கு வீல்பேஸ் கூடியிருப்பதால் இடவசதி தாராளமாகியுள்ளது.

ஹெட்லைட்
இந்த செக்மென்ட்டில் முதல்முறையாக எல்இடி ஹெட்லைட் மற்றும் பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் வந்துள்ளது.

எஞ்சின்
முந்தைய மாடலில் இருந்த அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான். 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரும்.

டிரான்ஸ்மிஷன்
7 ஸ்பீடு சிவிடி டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. இது சிறந்த ஓட்டுதல் தரத்தை வழங்கும் என டொயோட்டா தெரிவிக்கிறது.

பாதுகாப்பு
டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

விற்பனை
இந்த புதிய கரொல்லா ஆல்டிஸ் காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. மே மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள்
ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா, ஸ்கோடா ஆக்டாவியா, ஹூண்டாய் எலன்ட்ரா கார்களுக்கு இது போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








