புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது புதிய ஹோண்டா பிரியோ!
அடுத்த தலைமுறை ஹோண்டா பிரியோ காரில் புத்தம் புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹோண்டா அமேஸ், சிட்டி, மொபிலியோ உள்ளிட்ட கார்கள் விற்பனையில் சாதித்து வருகின்றன. இந்தநிலையில், பிரியோ காரும் டீசல் எஞ்சினுடன் வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்த தலைமுறை மாடல்
அடுத்த தலைமுறை ஹோண்டா பிரியோ மாடலில்தான் புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது.

புதிய டீசல் எஞ்சின்
தற்போது சிட்டி, அமேஸ், மொபிலியோ கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின்தான் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் டீசல் எஞ்சினாக மாற்றப்படுகிறது.

அதிக மைலேஜ்
ஹோண்டாவின் டீசல் எஞ்சின் மிகச்சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கிறது. இந்தநிலையில், பிரியோ காரில் பொருத்தப்பட இருக்கும் புதிய 1.2 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சினும் மிகச்சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அறிமுகம்
2017ம் ஆண்டில்தான் புதிய தலைமுறை ஹோண்டா பிரியோ கார் வர இருக்கிறது. எனவே, பிரியோ டீசல் மாடலை காண்பதற்கு சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டியிருக்கிறது.

விற்பனை அதிகரிக்கும்
பிரியோ கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹோண்டாவின் குறைந்த விலை மாடலாக இருந்தும், அமேஸ், சிட்டி அளவுக்கு கைகொடுகக்கவில்லை. இந்தநிலையில், டீசல் மாடலில் பிரியோ அறிமுகம் செய்யப்பட்டால் நிச்சயம் ஹோண்டாவின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








