நிசான் எவாலியா காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் நிசான் எவாலியா எம்பிவி காரின் புதிய டாப் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
நிசான் எவாலியாவின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக தொடர்ந்து பல புதிய வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், பிரிமியம் அம்சங்களுடன் கூடிய ஸ்பெஷல் மாடல் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

குரோம் கிரில்
புதிய மாடலில் குரோம் ஃபினிஷ் கொண்ட முன்பக்க கிரில் பொருத்தப்பட்டிருக்கிறது. பானட்டில் இரண்டு குரோம் கோடுகள் கொடுக்கப்பட்டு, அவை முன்பக்க கிரில்லுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இன்டிரியர்
ஏற்கனவே இருக்கும் நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள், 2வது மற்றும் மூன்றாவது வரிசைக்கான ஏசி வென்ட்டுகள், போன்றவற்றுடன் ஆன்ட்டி க்ளேர் ரியர் மிரர், கிளவ் பாக்ஸ் லிட், மரவேலைப்பாடு கொண்ட டேஷ்போர்டு ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

ரியர் ரூஃப் ஸ்பாய்லர்
ரியர் ரூஃப் ஸ்பாய்லர், 10 ஸ்போக் அலாய் வீல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விலை
நிசான் எவாலியா எக்ஸ்வி(ஓ) வேரியண்ட்டுக்கு மேலே இந்த புதிய ஸ்பெஷல் டாப் வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ரூ.11,61,930 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய நிசான் எவாலியா விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








