நிசான் இந்தியா நிறுவனத்திற்கு புதிய நிர்வாக இயக்குனர்!
நிசான் இந்தியா நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக அருண் மல்ஹோத்ரா நியமிக்கப்ட்டுள்ளார்.
ஆட்டோமொபைல் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் அருண் மல்ஹோத்ரா. இதற்கு முன்னதாக மஹிந்திரா நிறுவனத்தின் விவசாயக் கருவிகளின் உற்பத்தி பிரிவின் சர்வதேச விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையின் தலைவராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில், நிசான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வாகன விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையில் நிபுணத்துவம் மிக்கவர் அருண் மல்ஹோத்ரா.
தற்போது நிசான் இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளில் முக்கிய பங்காற்ற உள்ளார். நிசான் இந்தியா நிறுவனத்தின் புதிய வர்த்தக கொள்கைகள், நிறுவனத்தின் வளர்ச்சி, புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தல் மற்றும் நிசான், டட்சன் பிராண்டுகளை பிரபலமடையச் செய்தல் உள்ளிட்ட பல முக்கிய பணிகளை கவனிக்க உள்ளார்.
மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டதாரியான அருண் மல்ஹோத்ரா கோல்கட்டா இந்திய தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத்தில் எம்.பி.ஏ., மேலாண்மை பட்டத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








