நிசான் கார்களுக்கு பண்டிகை கால சிறப்பு சேமிப்பு சலுகைகள்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து கார் மாடல்களுக்கும் சிறப்பு சேமிப்பு சலுகைகளை நிசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
மைக்ரா, சன்னி, எவாலியா, டெரானோ உள்ளிட்ட மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை பெறும் வாய்ப்பு தற்போது இருக்கிறது.

மைக்ரா ஹேட்ச்பேக் காருக்கு ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனசாக பெறலாம். இதேபோன்று, சன்னி செடான் காரின் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கு ரூ.1.45 லட்சம் வரை சிறப்பு சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும், சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு ரூ.60,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் நிசான் அறிவித்துள்ளது. டெரானோ எஸ்யூவிக்கு ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனசையும், பரிசு கூப்பனையும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.
இதேபோன்று, எவாலியா எம்பிவி காருக்கு ஓர் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்சை வழங்குவதாக நிசான் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 31ந் தேதி வரை கார் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்பு சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








