இதுதான் அடுத்த தலைமுறை நிசான் ஜிடிஆர் காரின் கான்செப்ட்?!
சோனி பிளேஸ்டேஷனுக்காக உருவாக்கப்பட்ட கிரான் டூரிஷ்மோ ரேஸ் வீடியோ கேமின் 15வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், நிசான் கான்செப்ட் 2020 விஷன் கிரான் டூரிஷ்மோ என்ற பெயரில் புதிய கான்செப்ட் கார் மாடலை நிசான் வெளியிட்டுள்ளது.
நவீனத்துவம் ததும்பும் டிசைனில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கான்செப்ட் மாடல்தான் 2016ல் அறிமுகம் செய்யப்பட இருக்கும் அடுத்த தலைமுறை நிசான் ஜிடி-ஆர் ஆர்36 காருக்கான முன்னோட்ட மாடலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

லண்டன் டிசைன்
லண்டனில் உள்ள ஐரோப்பிய நிசான் வடிவமைப்பு மையத்தில் இந்த புதிய நிசான் கான்செப்ட் 2020 கிரான் டூரிஷ்மோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பான ஏரோடைனமிக்
இந்த புதிய கான்செப்ட் மாடல் சிறந்த ஏரோடைனமிக் டிசைனை கொண்டிருப்பதாகவும், அதனை தயாரிப்பு நிலைக்கு மிக எளிதாக கொண்டு செல்வதற்கு ஏதுவான அம்சங்களுடன் இருப்பதாகவும் ஜப்பானிலுள்ள நிசான் வடிவமைப்பு மைய பொறியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அடிப்படை டிசைன்
இந்த புதிய கான்செப்ட் கார் நிசான் ஜிடி-ஆர் காரின் பல டிசைன் தத்துவங்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக, காரின் முன்பக்கம் ஜிடி-ஆர் டிசைன் தாத்பரியங்களை கொண்டு வடிவமைத்துள்ளனர்.
வீடியோ
நிசான் கான்செப்ட் 2020 விஷன் கிரான் டூரிஷ்மோ கான்செப்ட் மாடலின் வீடியோவை காணலாம்.


Click it and Unblock the Notifications








