டட்சன், நிசான் கார்களிலும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்: சொந்தமாக தயாரிக்கும் நிசான்

By Saravana

ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்ற புதிய வகை ஆட்டோமேட்டிக் மாடலில் வெளியிடப்பட்ட மாருதி செலிரியோ மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் தனது போல்ட் மற்றும் ஸெஸ்ட் கார்களின் டீசல் மாடல்களில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதனால், மார்க்கெட்டில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடல்களின் வருகை கணிசமாக அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, பல நிறுவனங்கள் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடல்களை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது நிசான் நிறுவனமும் இந்தியாவில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் தனது கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Nissan Micra

மைக்ரா, சன்னி கார்களில் சிவிடி டிரான்ஸ்மிஷனுடன் விற்பனை செய்கிறது நிசான். ஆனால், இவை விலை அதிகம் கொண்டதாக இருக்கிறது. ஆனால், ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்களின் தயாரிப்பு மற்றும் உற்பத்தி செலவீனம் மிக குறைவு. எனவே, விரைவில் தனது கார் மாடல்களில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை பொருத்துவதற்கு நிசான் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மாருதி, டாடா மோட்டார்ஸ் ஆகியவை இத்தாலியை சேர்ந்த மேக்னடி மரெல்லி நிறுவனத்திடன் ஒத்துழைப்புடன் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை கொண்டு வந்தன. ஆனால், நிசான் நிறுவனம் சொந்தமாகவே ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதனால், தயாரிப்பு செலவீனம் வெகுவாக குறையும். இதனால், தனது கார்கள் மட்டுமின்றி, டட்சன் பிராண்டு கார்களிலும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை பொருத்தி அறிமுகம் செய்ய நிசானுக்கு வாய்ப்பு கிட்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 9, 2014, 17:46 [IST]
English summary
Realising the cost advantage Automated Manual Transmission (AMT) provides and seeing the success of the AMT equipped Maruti Celerio, Nissan has reportedly decided to take the same technological path for its vehicles sold in India.
மேலும்... #nissan #four wheeler #நிசான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+